செங்கல்பட்டு- நிலை தடுமாறி ஓடி கிணற்றில் பாய்ந்த கார்-காரை ஓட்டிய மாணவர், தலைமை ஆசிரியர் பலி
செங்கல்பட்டு: சாலையோரத்தில் நின்றவர் மீது மோதி நிலைதடுமாறிய கார் 8 பேருடன் கிணற்றுக்குள் கவிழ்ந்தது. இதில் இருவர் பலியாகினர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
செங்கல்பட்டை அடுத்த தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ., பிடிக்கும் மாணவர்கள், அருண்தாஸ் (18), கிருஷ்ணகுமார் (19), மதன்குமார் (18), மிதுன்பிரகாஷ் (18), மோதிலால் (19), மணிகண்டன் (19), அருண் குமார் (18), அஸ்வின்(18). 8 பேரும் கார் ஒன்றில், கல்லூரியில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்றனர்.
அப்போது, நெம்மேலி அருகே, திருக்கழுக்குன்றம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் (50), சாலையோரத்தில் நின்ற, அவரது நண்பர் சார்லஸ் (40) உடன் பேசிக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் அப்பகுதியில் வந்த மாணவர்கள் இருந்த கார், திடீரென நிலை தடுமாறி ஓடி, ஆனந்தராஜ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பின்னர் தொடர்ந்து ஓடிய கார் அருகில் உள்ள கிணற்றுள் கவிழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரம் போராடி 7 மாணவர்களை உயிருடன் மீட்டனர்.
அதற்குள் காரை ஓட்டி வந்த கிருஷ்ணகுமார் இறந்திருந்தார். இந்த விபத்தில் மாணவன் அருண்தாஸ் மற்றும் சாலையில் நின்ற சார்லஸ் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications