மதுரை திருமங்கலம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு- மேலும் ஒரு பெண் புரோக்கர் சரண்
ராமநாதபுரம்: மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த சிறுமி பாண்டிச்செல்வி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் ஒரு பெண் புரோக்கர் போலீஸில் சரணடைந்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி பாண்டிச்செல்வி. இச்சிறுமியை பலர் சேர்ந்து கடந்த 2 வருடங்களாக பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஊர் ஊராக இச்சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக ராமேஸ்வரம் திமுக நகராட்சித் தலைவர் ஜலீல் உள்ளிட்ட பலர் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.
இச்சம்பவத்தில் 7 பேர் இதுவரை கைதாகியுள்ளனர். இந்த நிலையில் ருக்மணி என்ற பெண் விபச்சாரப் புரோக்கர் ராமநாதபுரம் கோர்ட்டில் சரணடைந்தார். இவர் காரைக்குடியைச் சேர்ந்தவர்.
ருக்மணியை 15 நாள் சிறைக் காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications