'வீரபாண்டி ஆறுமுகம்': இன்ஸ்பெக்டர் லட்சுமணன் சரணடைய உத்தரவு
சேலம்: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மிக நெருக்கமாக இருந்த சேலம் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் போலீசில் சரணடைய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கு மற்றும் பிரிமியர் மில் நிலம் அபகரிப்பு வழக்குகளில் சேலம் கொண்டலாம்பட்டியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய லட்சுமணன், வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் கவுசீக பூபதி, சேலம் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார், ஆடிட்டர் துரைசாமி, துரைசாமி, உள்பட பலரின் பெயர் போலீசார் தேடப்படும் பட்டியில் இடம் பெற்றுள்ளது.
இதில் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். ஆனால், அவர் பணியில் சேராமல் மருத்துவ விடுப்பில் சென்றார். 2 வழக்குகளிலும் அவரது பெயர் இடம் பெற்றதால் அவர் தலைமறைவானார். அவரைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.
அவரது மனுவை விசாரித்த சென்னை நீதிபதி ராஜசூர்யா, நாளை (9ம் தேதி) சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி 3 நாள் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் விசாரணை முடிந்த பிறகு அவர் சேலம் நீதிமன்றத்தி்ல் ஆஜர்படுத்தப்படும்போது முன் ஜாமீன் பெறலாம் என்றும் உத்தரவிட்டார்.
இந் நிலையில் இன்ஸ்பெக்டர் லட்சுமணனை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்தது. மேலும் அவர் மீது 2 வழக்குகளும் பதிவானதால் அவர் தேடப்படும் குற்றவாளியாக போலீசாரால் அறிவிக்கப்பட்டார். அவரது மனைவியை பலமுறை சூரமங்கலம்டி போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தியும் அவரைப் பிடிக்க முடியவில்லை.
இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் நாளை காலை 10 மணிக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரண் அடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications