ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமியின் டெல்லி வீடு மீது காங்கிரஸார் தாக்குதல்
டெல்லி: ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமியின் டெல்லி வீடு மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
சமீபத்தில் இரண்டு சர்ச்சைகளில் சிக்கினார் சாமி. முதலில் இந்தியாவில் வாழும் சிறுபான்மையினர்கள் தாங்கள் இந்துக்கள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படி ஒத்துக் கொள்பவர்கள்தான் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்தால் அவர் விசிட்டிங் புரபஸராக பணியாற்றி வரும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தியாவிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி தேசிய சிறுபான்மையினர் ஆணையம் வழக்கு தொடர தீர்மானித்தது.
இந்த நிலையில் அமெரிக்காவில் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சோனியா காந்திக்கான செலவுகள் குறித்து ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்திருந்தார் சாமி. இதுவும் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
சாமியின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து கிழக்கு டெல்லியில் உள்ள நிஜாமுதீனில், சுப்பிரமணியசாமி வீட்டு முன்பு கூடி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது வீட்டில் கல்வீசித் தாக்கப்பட்டது.
அப்போது வீட்டில் சாமி இல்லை. இதுகுறித்துப் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து காங்கிரஸாரைக் கலைந்து போகச் செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications