கருணாநிதி குடும்பத்து 'பேப்பரை'யெல்லாம் படித்து 'டைம் வேஸ்ட்' பண்ணக் கூடாது-ஜெயலலிதா கண்டிப்பு
சென்னை: கருணாநிதியின் குடும்பத்தினர் நடத்தி வரும் பேப்பர்களையெல்லாம் படித்து நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று அதிமுக உறுப்பினர்களை கண்டித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
தமிழக சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் நடந்தது. அப்போது அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர் விஜயபாஸ்கர் பேசுகையில்,
தி.மு.க. பத்திரிகையில், பட்ஜெட்டைப் பற்றி பல்வேறு குறைகளை கூறியுள்ளனர். அறிவித்துள்ள திட்டங்களை புரிந்து கொள்ளாமல், வேண்டும் என்றே குறை கூறுகின்றனர். ஐந்து முறை முதல்வராக இருந்தார், தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார், என்கின்றனர். ஆனால், சட்டசபையில் அவர் கால் கூட வைப்பதில்லை.
இன்னொருவரை, "தளபதி, தளபதி' என்கின்றனர். அவர், பள்ளி குழந்தைபோல், "சட்டசபையில் இந்த இடத்தில் தான் நாங்கள் உட்காருவோம்' என அடம் பிடிக்கிறார். இவர்கள் எல்லாம் இப்படி செய்வர் என தெரிந்து தான், எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட அவர்களுக்கு மக்கள் தரவில்லை என்று பேசினார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் குடும்பப் பத்திரிக்கையைப் படித்து விட்டு விஜயபாஸ்கர் பேசுகிறார். அந்தப் பத்திரிக்கையை யாருமே படிப்பதில்லை. இவர் மட்டும் ஏன் அதைப் படித்து விட்டு இங்கு வந்து பேசி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார். அந்த பத்திரிக்கையைப் படிக்கும் நேரத்தில் நல்ல புத்தகத்தைப் படிப்பதற்கு செலவிடலாம் என்று கண்டிப்பான குரலில் சொன்னார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications