பணம், அமெரிக்க குடியுரிமைக்காக ஒசாமாவைக் காட்டிக்கொடுத்த ஐஎஸ்ஐ அதிகாரி?
லண்டன்: அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்த ரூ. 120 கோடி பணத்திற்கு ஆசைப்பட்டு பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தான் ஒசாமா பின் லேடன் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்ததாக அமெரி்க்க தேசிய பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் பேராசிரியரும், ரம் மற்றும் நகை கடத்தல்காரருமான ஆர். ஜே. ஹில்ஹவுஸ் தனது பிளாக்கில் எழுதியுள்ளதாவது,
பணம் மற்றும் குடும்பத்தாருக்கு அமெரிக்க குடியுரிமை வேண்டி பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரி ஒருவர் தான் ஒசாமாவைக் காட்டிக் கொடுத்தார்.
ஒசாமா பின் லேடனை அப்போத்தாபாத்தில் வீட்டுச் சிறையில் வைத்து பாதுகாக்குமாறு சௌதியைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறைக்கு பணம் கொடுத்து வந்தனர்.
அதன் பிறகு சிஐஏ ஒசாமா அங்கு தான் உண்மையிலேயே இருக்கிறாரா என்று கண்டறிய முயன்று அதில் வெற்றியும் கண்டது. பின் லேடன் வீட்டை அமெரிக்கா தாக்கப்போகிறது என்று பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறைக்கு ஏற்கனவே தெரியும். இது தவிர தாக்குதல் நடத்தவும் அவர்கள் அமெரிக்காவுக்கு உதவினர்.
ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அது அழிக்கப்பட்டது பாகிஸ்தானியர்களுக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பேயில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த பிளாக் குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்க வெளியுறவுத் துறை மறுத்துவிட்டது என்று டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தனை நாட்களாக கொரியர் ஆள் மூலம் தான் ஒசாமா இருப்பிடத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications