சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் சரண்
மதுரை: சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் உள்ளிட்ட மூவர் மதுரை நீதி மன்றத்தில் சரண் அடைந்தனர்.
மதுரை அடுத்த திருமங்கலம் அருகே வாகைக்குளத்தை சேர்ந்த சிவசாமி மகள் மல்லிகா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது தோழியின் தாயார் பூங்கோதையிடம் வேலை கேட்டுச் சென்றார். ஆனால் மல்லிகாவை பூங்கோதை வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார்.
மதுரையைச் சேர்ந்த பெண் புரோக்கர் பேச்சி என்ற சத்யா, காரைக்குடி ருக்மணி, ராமநாதபுரம் ஹேமா உள்ளிட்ட பல பெண் புரோக்கர்களிடம் மல்லிகா பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டார்.
இவர்களிடம் தப்பி வந்த சிறுமி, போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மேலும், இந்த வழக்கில் ராமேஸ்வரம் திமுக நகராட்சித் தலைவர் ஜலீல் உள்பட பலரை வலை வீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசாரால் தேடப்பட்ட மதுரை கீழக்குயில்குடியைச் சேர்ந்த பெண் புரோக்கர் பேச்சி என்ற சத்யா (30) மதுரை ஜே.எம். 2 நீதி மன்றத்தில் சரணடைந்தார்.
இதே போல், இதே வழக்கில் தேடப்பட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த சபரி என்ற சதீஷ் (28), பாண்டி (30) ஆகிய இருவரும் சரண் அடைந்தனர். இவர்கள் மூவரையும் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications