ஊழலை ஒழிக்கும் அரசியல் திராணி பிரதமரிடம் இல்லை- பாஜக கடும் சாடல்

ராஜ்யசபாவில் பிரதமர் மன்மோகன்சிங் இன்று அன்னா ஹஸாரே கைது குறித்து விளக்கி அறிக்கை வாசித்தார். அதன் பின்னர் அருண் ஜேட்லி பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த சில மாதகங்களாக விவாதத்தில் இருந்து வரும் ஒரு விவகாரம், கடந்த சில நாட்களில் உச்சத்தை எட்டியுள்ளது.
நேற்று நடந்த சம்பவங்கள் குறித்து பிரதமர் கூறுகையில், யார் சட்டத்தை இயற்றுவது என்ற கேள்வியை எழுப்பினார். சட்டத்தை இயற்றுவது நாடாளுமன்றம்தான் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் ஊழலுக்காக போராடி போராடி விரக்தி அடைந்துள்ள மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்து இந்த அரசு குற்றம் சாட்டுகிறது. தயவு செய்து அவர்களை குற்றம் சாட்டாதீர்கள்.
ஊழலை ஒழிக்க இந்த அரசு என்ன உறுதியான நடவடிக்கையை எடுத்துள்ளது. பிரதமர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார். ஊழலை நான் ஒழிப்பேன், என்னிடம் அதை விடுங்கள் என்று கூறும் அரசியல் தைரியம், திராணி பிரதமருக்கு வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது அவரிடம் இல்லை.
இந்த நாட்டை ஆட்சி புரிவது யார் என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது. இந்த ஆட்சி அராஜகப் பாதையில் நடை போட்டுக் கொண்டிருக்கிறது. போலீஸ் சீருடையில் ஒழிந்து கொண்டு போராட்டத்தி்ல் ஈடுபடுபவர்களை ஒடுக்கி வருகிறது.
இந்த நாட்டு குடிமகன் ஒவ்வொருவருக்கும் தனது கருத்துக்களைத் தெரிவிக்க முழு உரிமை உண்டு. அதைத் தடுக்க இந்த அரசு முயலுகிறது.
இந்த அரசுக்கு ஊழலை ஒழிக்கும் தகுதியும், திறமையும், துணிச்சலும் இல்லை. ஊழலை ஒழிக்க வலுவான நடவடிக்கையை பிரதமர் எடுத்தால் அவருக்குப் பின்னால் நாங்கள் நிற்போம், இந்த நாடு நிற்கும், நாட்டு மக்கள் நிற்பார்கள். மாறாக ஏற்கனவே விரக்தியடைந்த நிலையில் இருக்கும் மக்களை விமர்சிக்காதீர்கள் என்றார் ஜேட்லி.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications