தேசியக் கொடிகளை சுமந்தபடி போராடும் மக்களைப் பார்த்து எனக்கு புது சக்தி பிறக்கிறது-அன்னா
டெல்லி: தேசியக் கொடிகளுடன் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்களைப் பார்க்கும்போது எனக்குப் புதிய சக்தி பிறக்கிறது. எனது கனவுகள் நனவாகி வருகின்றன. நாட்டின் எதிர்காலம் மிகவும் சுபிட்சமாக இருக்கும் என்ற நம்பிக்கை வருகிறது என்று அன்னா ஹஸாரே கூறியுள்ளார்.
டெல்லி திஹார் சிறையில் கடந்த 2 நாட்களை செலவிட்ட அன்னா ஹஸாரே, கிரண் பேடியிடம் பேசிய வீடியோ காட்சி வெளியிடப்பட்டது. அதில் அவர் பேசியுள்ளதாவது:
ஜன் லோக்பால் மசோதா வரும் வரை எனது போராட்டத்தை நான் விடப் போவதில்லை. எனது உடல் நன்றாகவே உள்ளது. என்னைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன்.
எனக்கு சோர்வு ஏற்படவில்லை. வெறும் காலில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு என்னால் நடக்க முடியும். இன்று நான் இங்கு இருக்கிறேன், நாளை உங்களை வந்து சந்திப்பேன்.
ஊழல் ஒழிப்பு சட்ட மசோதாவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசு தாக்கல் செய்துள்ள பலவீனமான லோக்பால் மசோதாவை அரசு கைவிட வேண்டும்.
இந்த நாட்டின் இளைஞர்கள் விழித்தெழுந்தால் எதிர்காலம் மாறும் என்று நான் தொடர்ந்து கூறிவருகிறேன். இப்போது அந்தக் கனவு நனவாகி வருவதைப் பார்க்கிறேன். மூ்வண்ணக் கொடியை தங்களின் தோள்களில் சுமந்தபடி அவர்கள் போராடுவதையும், கோஷமிடுவதையும் பார்க்கும்போது எனக்குப் புதிய சக்தி பிறக்கிறது.
நாளை உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். என்னைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டும். நான் மிகுந்த நலத்துடன் இருக்கிறேன்.
15 நாட்கள் மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். இந்த 15 நாட்களில் ஒன்றும் நடந்து விடப் போவதில்லை. 15 நாட்களுக்குப் பிறகு கால நீட்டிப்பு கேட்பேன் என்றார் ஹஸாரே.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications