ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல் நிலை தேர்வு முடிவு வெளியீடு- தமிழகத்தில் 600 பேர் தேர்ச்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல்நிலை தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலை எழுத்துத் தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடந்தது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் இருந்து 4 லட்சத்து 97,187 பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இதில் 11,984 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த 600 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்தக்கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள், அக்டோபர் மாதம் 29ம் தேதி துவங்குவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications