தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று இளைஞர்களே இல்லாத நிலையை ஏற்படுத்தி விட்டனர்- திமுக

ராஜ்யசபாவில் இன்று பெரும் இழுபறிக்குப் பின்னர் அரை மனதாக இலங்கைப் பிரச்சினை குறித்த விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் கலந்து கொண்டு பாஜக, அதிமுக, திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் பேசினர்.
திருச்சி சிவா பேசுகையில், தமிழர்கள் தனி நாடு கேட்டார்கள் என்பதற்காக அவர்களைக் கொல்லவில்லை இலங்கை. மாறாக அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொன்று குவித்தனர். கொத்துக் கொத்தாக தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தமிழர்கள் மீது துவேஷம் காரணமாக, தமிழ் நூல் நிலையத்தை தீவைத்து எரித்தனர். பெண்கள் மொத்தமாக மானபங்கப்படுத்தப்பட்டனர். தமிழ் இளைஞர்களே இல்லாத நிலையை இலங்கை அரசு உருவாக்கி விட்டது.
உள்நாட்டுப் போர் என்ற பெயரில் தமிழர்களைக் கொன்று குவித்தது இலங்கை இனவெறி ஆட்சி.
இலங்கைக்கு ரூ. 500 கோடி நிவாரண நிதியை அளித்தது இந்தியா. அந்த நிதி எப்படி செலவழிக்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்க வேண்டும். எம்.பிக்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி ஆய்வு நடத்த வேண்டும்.
அமெரிக்கப் பிரஜையாகவும் உள்ள கோத்தபயா ராஜபக்சேவை அமெரிக்காவில் வைத்து விசாரிக்க வேண்டும். அதேபோல முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் விசாரிக்க வேண்டும் என்றார் சிவா.
மதிமுக கணேச மூர்த்தி
மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி பேசுகையில், பயங்கவாரத்தை அழிக்க நடந்த போர் அல்ல ஈழத்தில் நடந்த போர். அது பயங்கரவாதிகளை அழிப்பது என்ற பெயரில் நடந்த இன அழித்தலாகும். பயங்கரவாதிகள் என்று கூறி தமிழர்களை அழித்து விட்டனர்.
இந்தியாவின் முழு உதவியுடன் இந்த இன அழித்தல் நடந்துள்ளது. பாதுகாப்பான இடங்களில் இருந்தவர்களை தேடித் தேடி அழித்துள்ளனர்.
சிங்களர்களுடன் நேசமாக இருக்க தமிழர்களை அழிக்காதீர்கள் என்று இந்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications