பேச்சுவார்த்தை தோல்விக்கு ப.சிதம்பரம், கபில் சிபல் தான் பொறுப்பு- அன்னா குழு புகார்

ஹசாரே குழு உருவாக்கிய ஜன் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு வசதியாக அதை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், இது காலம் கடத்தும் செயல் என ஹசாரே குழு கூறி வருகிறது. மசோதாவை உடனடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதை நிறைவேற்ற வேண்டும் என ஹசாரே கோருகிறார். இதனால் அவரது உண்ணாவிரதமும் தொடர்கிறது.
இந் நிலையில் நேற்றிரவு அரசுத் தரப்பினரும் ஹசாரே குழுவினரும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்த்து அவரது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ஆலோசித்தனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.
இதற்கு சிதம்பரமும் கபில் சிபலும் தான் காரணம் என ஹசாரே குழு குற்றம் சாட்டியுள்ளது. அந்தக் குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜரிவால் நிருபர்களிடம் கூறுகையில், அன்னா தரப்புடன் பேசசுவார்த்தை நடத்தக் கூடாது என மத்திய அரசை சிதம்பரமும் கபில் சிபலும் தடுத்துவிட்டனர்.
இதனால் தான் ஜன் லோக்பால் குறித்து பேச்சு நடத்துவது குறித்து நேற்று நடந்த ஆலோசனைகள் தோல்வியடைந்தன. காங்கிரசின் உள் கட்சி அரசியலுக்கு எங்களை பலியாக்கிவிட்டனர் என்றார்.
இந்தக் குழுவைச் சேர்ந்த கிரண் பேடி கூறுகையில், சிதம்பரம், கபில் சிபல் என பலருடனும் பேசியும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. இனி யாருடன் பேசுவது என்றும் தெரியவில்லை. மத்திய அரசைத் சேர்ந்தவர்கள் ஆளுக்கு ஒன்று பேசுகின்றனர். நேரத்துக்கு ஒன்று பேசுகின்றனர். இதனால் பேச்சுவார்த்தையே வேஸ்ட் என்றார்.
இந் நிலையில் மீண்டும் இரு தரப்பையும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுத்த மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் முயற்சி செய்து வருகிறார். மீண்டும் 4வது முறையாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு அன்னா தரப்புடன் அவர் பேசி வருகிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications