தூக்கு தண்டனையை நீக்க தனக்கு அதிகாரமில்லை என்ற ஜெயலலிதா பேச்சு சரியல்ல: மணியரசன்
மதுரை: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை நீக்க தனக்கு அதிகாரமில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறுவது சரியில்லை என்று தமிழ்த் தேசப் பொதுவுடமை கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அப்பாவித் தமிழர்கள், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருடைய கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். அவர்களின் தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது சரியில்லை.
அரசமைப்புச் சட்ட விதி 161 மற்றும் 72 உட்பிரிவு(3) ஆகியவை குடியரசுத் தலைவர் நிராகரித்த கருணை மனுக்களை மாநில ஆளுநர் ஏற்று தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. விதி 72ன் படி குடியரசுத் தலைவருக்கு தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் வழங்குகிறது.
அதே விதியின் உள்பிரிவு(3) ன்படி குடியரசுத் தலைவர் ஒரு கருணை மனு மீது என்ன முடிவு எடுத்திருந்தாலும், அதை மாநில ஆளுநர் அதைப் பொருட்படுத்தாமல் தம் அதிகாரப்படி எந்த முடிவையும் எடுக்கலாம் என்று உரிமை அளித்துள்ளது.
இந்த உரிமையை உச்சநீதிமன்றம் தயாசிங் எதிர் இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கிலும், திரிவேணிசெல் எதிர் குஜராத் மாநில அரசு என்ற வழக்கிலும் உறுதி செய்துள்ளது. இவை குறித்தெல்லாம் கடந்த 15 நாட்களாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் பல்வேறு அரசியல் இயக்கங்களும், குடியுரிமை அமைப்புகளும், சட்ட வல்லுநர்களும், தெளிவாக எடுத்துக் கூறி வருகின்றனர்.
பி.யூ.சி.எல். அமைப்பு முதலமைச்சருக்கு தேவையான சட்ட சான்றுகளுடனும், தீர்ப்புகளுடனும் தமிழக முதல்வருக்கு கடிதம் கொடுத்துள்ளது. கேரளத்தில் சி.ஏ.பாலன் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த பின்பு முதல்வராக இருந்த இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு (1957) அப்போது கேரளா சட்ட அமைச்சராக இருந்த வீ.ஆர்.கிருஷ்ண அய்யர் ஆகியோர் தாங்கள் விதி 161ஐ பயன்படுத்தி சி.ஏ.பாலன் கருணை மனுவை ஏற்று தூக்குத் தண்டனை நீக்கப் போவதாக அறிவித்தனர்.
அதன்பின் இந்திய அரசு இறங்கி வந்து சி.ஏ.பாலன் கருணை மனுவை ஏற்று அவரது தூக்குத் தண்டனையை நீக்கியது. தமிழக முதல்வர் இந்த முன் எடுத்துக்காட்டை பின்பற்றி பேரறிவாளன், சாந்தன், முருகன் கருணை மனுவை மறு ஆய்வு செய்து ஏற்குமாறு தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரலாம்.
அதை விட்டுவிட்டு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி ஒதுங்கிக் கொள்வது சரியல்ல. மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் விதி 110கீழ் வெளியீட்டுள்ளார்.
முதல்வரின் அறிவிப்பை சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவாதிக்க கூடாது என்ற நோக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுவும் 3 தமிழர் உயிரைக் காப்பாற்றும் அக்கறையுடன் கையாளப்பட்ட உத்தியல்ல என்பது தெளிவாகும்.
முதல்வர் ஜெயலலிதா மாநில அரசுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை நீக்குமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பெ.மணியரசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications