செப். 2வது வாரத்தில் இந்தியா திரும்புகிறார் சோனியா காந்தி
டெல்லி: அமெரிக்காவில் அறுவைச் சிகிச்சை செய்து பின்னர் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுத்து வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செப்டம்பர் 2வது வாரத்தில் டெல்லி திரும்பவுள்ளார்.
சோனியா காந்திக்கு கருப்பை வாய் புற்றுநோய் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக உலகிலேயே மிகவும் பிரபலமான நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவர் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுத்து வந்தார்.
தற்போது அவர் செப்டம்பர் 2வது வாரத்தில் இந்தியா திரும்புவார் எனத் தகவல்கள் கூறுகின்றன.
டெல்லி திரும்பினாலும் கூட அவர் கட்சிப் பணிகளுக்குத் திரும்பி வர சில வாரங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. அதுவரை அவர் நியூயார்க்குக்குச் செல்வதற்கு முன்பு அமைக்கப்பட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட நால்வர் அடங்கிய குழுவே கட்சிப் பணிகளை கவனிக்கும் என்று தெரிகிறது.
சோனியா காந்தி இல்லாத நிலையில், அன்னா ஹஸாரே விவகாரத்தை கையாளுவதில் மத்திய அரசும், காங்கிரஸும் கடுமையாக திணறிப் போய் விட்டன, தடுமாறி மக்களிடம் கடும் அதிருப்தியை சம்பாதித்தன என்பது நினைவிருக்கலாம்.
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications