தங்கம் விலை மீண்டும் 21 ஆயிரத்தைத் தொட்டது!
சென்னை: தங்கத்தின் விலை இன்று மீண்டும் சவரன் ரூ 21 ஆயிரத்தைத் தொட்டது.
அமெரிக்க டாலரின் விலை வீழ்ச்சி, கச்சா எண்ணை விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 20-ந்தேதி ஒரு பவுன் 21 ஆயிரத்தை தாண்டியது.
பின்னர் படிப்படியாக சரிந்து, ரூ 20000-க்குள் வந்தது. ஆனால் இந்த நிலை ஒரு நாள் மட்டுமே நீடித்தது. நேற்று மாலை தங்கம் விலை அதிகரித்து ரூ.20 ஆயிரத்து 808 ஆக இருந்தது.
இன்று ஒரே நாளில் பவுனுக்கு மேலும் ரூ.280 அதிகரித்தது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 88 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,636-க்கு விற்கிறது. திருமண முகூர்த்த நாள், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு என விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்களை தயாராக வைத்துள்ளனர் விற்பனையாளர்கள்.
வெள்ளி விலையும் உயர்வு
வெள்ளியின் விலையிலும் இன்று உயர்வு காணப்பட்டது. நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ.64 ஆயிரத்து 755 ஆக இருந்தது. இன்று கிலோவுக்கு ரூ.1,230 உயர்ந்து ரூ.65 ஆயிரத்து 985 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.70.60-க்கு விற்பனையாகிறது.
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications