கேஜ்ரிலாலுக்கு ஐடி நோட்டீஸ்: எங்களோடு விளையாடாதீங்க! - ஹஸாரே பாய்ச்சல்
ராலேகான் சித்தி: எனது குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது வருமான வரித்துறை. இது எங்களை அவமானப்படுத்துவதாகும். எங்களுடன் விளையாடாதீர்கள். இந்த விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய அரசை நான் கடுமையாக எச்சரிக்கிறேன், என அன்னா ஹஸாரே கூறியுள்ளார்.
அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவர் அரவிந்த் கேஜ்ரிவால். இவர் மத்திய அரசு பணியில் இந்திய வருவாய் பணி அதிகாரியாக இருந்தார். 2006-ம் ஆண்டு அப்பணியை ராஜினாமா செய்து விட்டு அன்னா ஹஸாரே குழுவில் இணைந்து பணியாற்றிவருகிறார்.
அவர் பணி ஒப்பந்த விதிமுறைகளை மீறி விட்டதாகவும் மத்திய அரசுக்கு ரூ.9 லட்சம் பாக்கி வைத்துள்ளதாகவும் அதை திருப்பி செலுத்தினால்தான் ராஜினாமாவை ஏற்க முடியும் என்றும் கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு அன்னா ஹசாரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது சொந்த ஊரான ராலேகான் சித்தி கிராமத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
அரவிந்த் கெஜ்ரிவால் சிறந்த தேச பக்தர். கடந்த 8 மாதங்களாக அவரை எனக்குத் தெரியும். அவர் மிகவும் நேர்மையானவர். வருமான வரித்துறை அவர் ரூ.9 லட்சம் பாக்கி வைத்து இருப்பதாக கூறி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
4 ஆண்டுகள் கழித்து இந்த பிரச்சினையை கிளப்ப காரணம் என்ன? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அவர் இந்த நாட்டுக்காக உழைக்கிறார். இதனால் தனது சொத்துக்களை இழந்துள்ளார். அப்படிப்பட்டவர் மீது புகார் கூறுவது சரியல்ல.
மத்திய அரசு மோசமான விளையாட்டு விளையாடுகிறது. இந்த விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய அரசை நான் கடுமையாக எச்சரிக்கிறேன்.
மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கை தொடர்ந்தால் அதை எங்களது மக்கள் பொது நல அமைப்பு வேறு வழியில் சந்திக்கும். இதற்காக போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்," என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications