பிளக்ஸ் போர்டு வைப்பதில் 2 பிரிவினர் இடையே மோதல்- உத்தப்புரத்தில் பதட்டம்
உத்தப்புரம்: உத்தப்புரத்தில் பிளக்ஸ் போர்டு வைப்பதில் 2 பிரிவினர் இடையே கடும்மோதல் ஏற்பட்டதால் அங்கு பதட்டம் நிலவுகின்றது. பதட்டத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், உத்தப்புரத்தில் நீண்ட காலமாக தீண்டாமைப் பிரச்சினை நிலவி வருகிறது. அங்கு அமைக்கப்பட்டிருந்த தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டநாள் முதல் இரு பிரிவினருக்கும் இடையே நீரு பூத்த நெருப்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த ஊரில் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. மேலும், பொதுமக்கள் நலன் கருதி நிரந்தர புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில், சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சி. பிறந்த நாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 5ம் தேதி ஒரு தரப்பினர் பிளக்ஸ் போர்டு வைத்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அதேபோல, செப்டம்பர் 14ம் தேதி தியாகி இமானுவேல்சேகரன் குருபூஜை சம்பந்தமான பிளக்ஸ் போர்டு தெற்குத்தெரு நுழைவாயில் முன் வைக்கப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில் 2 தரப்பினரும் கல்வீசி தாக்கிக் கொண்டதில், அய்யம்பிள்ளை (60), மணி (30), கணேசன்(30) ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த எஸ்.பி. ஆஸ்ராகர்க் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தார். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க டி.எஸ்.பி. குமார் தலைமையிலான பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications