2 கால்சென்டர் பெண் ஊழியர்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த எஸ்.ஐ.க்கு காப்பு
சென்னை: சாலையில் நின்ற 2 கால்சென்டர் பெண் ஊழியர்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த, எஸ்.ஐ., ஊர்காவல் படை காவலருடன் சேர்ந்து கைது செய்யப்பட்டார்.
சென்னை, பெரம்பூர் பக்சன் தெருவை சேர்ந்தவர் ஜனனி(23), நிக்கோலா(24) கால் சென்டர் பணியாளர்கள். இருவரும் கடந்த 5ம் தேதி, அதிகாலையில் பணிமுடிந்து வரும் வழியில், பெரம்பூர் மேம்பாலம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர்.
அப்போது அங்கு வந்த போலீஸ்காரர் மற்றும் மற்றொருவர், இவரிடம் விசாரித்தனர். அதன்பின் இருவர் மீதும் சந்தேகம் உள்ளதாக கூறி, அவர்களின் வீடுகளிலும் சோதனையிட்டனர்.
எதுவும் கிடைக்காத நிலையில், தேவைப்படும் போதெல்லாம், விசாரனைக்கு போலீஸ் நிலையத்திற்கு வர வேண்டும் என கூறி சென்றுள்ளனர். வீட்டில் சோதனை நடத்தும் போது, இருவரையும், இருஅர்த்த மொழியில் திட்டியதாகவும், செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஜனனி, நிக்கோலா ஆகிய இருவரும், கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், குற்றசாட்டப்பட்டவர் ஐ.சி.எப் போலீஸ் நிலைய எஸ்.ஐ., அய்யப்பன் என்பதும், அவருடன் வந்தவர் ஊர் காவல் படையில் பணியாற்றும் பாபு என்பதும் தெரிந்தது.
இருவரிடம் போலீசார் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அய்யப்பன், பாபு ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட அய்யப்பனுக்கு, சில மாதங்களுக்கு முன் திருமணமாகி அவரது மனைவி கர்ப்பமாக உள்ளனர். பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படும் முதல் போலீஸ் அதிகாரி அய்யப்பன்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications