தமிழர் கோயிலில் புகுந்து சிங்கள அமைச்சர் அடாவடி!

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து வடக்கில் 80 கி.மீட்டர் தூரத்தில் முனீஸ்வரம் என்ற இடம் உள்ளது. அங்கு தமிழர்களின் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 12-ந்தேதி இங்கு திருவிழா நடந்தது. திருவிழாவின்போது இங்கு ஆடுகளையும், கோழிகளையும் பலி கொடுப்பது வழக்கம்.
காலகாலமாக தமிழர் செய்து வரும் இந்த பலிக்கு இலங்கை நீதிமன்றம் தற்காலிகமாக தடைவிதித்துள்ளது.
இருந்தும், சாமி குற்றம் ஆகக் கூடாது என கருதிய தமிழ் மக்கள் அங்கு பலி கொடுக்க ஆடுகளை கொண்டு வந்தனர். இதை அறிந்ததும் சிங்கள அமைச்சர் மெர்லின் சில்வா தனது ஆதரவாளர்கள் 200 பேருடன் அங்கு வந்தார். இவர் அதிபர் ராஜபக்சேயின் அமைச்சரவையில் கூட்டுறவு துறை அமைச்சராக உள்ளார். அங்கு வந்த அவர் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்தார்.
கோவிலில் ஆடுகளையும், கோழிகளையும் பலி கொடுக்க கூடாது என்று அவர் ரகளையில் ஈடுபட்டார். இதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகக் கூறி கூறி தடுத்து நிறுத்தினார். இதற்கு பக்தர்களும் கோவில் பூசாரிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் அவர் கேட்கவில்லை. பலியை தடுத்து நிறுத்திய அவர் ஆடுகளை லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
இதற்கு இந்து அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார்.
புத்தமதத்தை தழுவும் சிங்களர்கள் கோவிலில் ஆடுகள் பலி கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் இறுதி கட்ட போரின் போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதை கண்டு கொள்ளவில்லை. குருடர்கள் போன்று கண்ணை மூடிக்கொண்டனர். அது நியாயமா? என கேட்டுள்ளார்.
மற்ற தமிழர் கட்சிகளும் இலங்கை அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications