வங்கி ஊழியர் குழந்தை கடத்தலில் மர்மம் நீட்டிப்பு: போஸ்டர்கள் ஒட்டி தேடல்
சென்னை: சென்னை, விருகம்பாக்கத்தில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த வங்கி ஊழியரின் 2 வயது மகள் மாயமானதில் மர்மம் நீடித்து வருகிறது.
விருகம்பாக்கம், மஜீத் நகர் வி.வி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிகிறார். அவரது மனைவி வசந்தி. அவர்களுக்கு கவிதா என்கிற 2 வயது மகள் இருக்கிறாள்.
நேற்று முன்தினம் காலை கணேசன் வங்கிக்கு சென்றுவிட்டார். வீட்டில் வசந்தியும், கவிதாவும் மட்டும் இருந்துள்ளனர். மாலை நேரத்தில் கவிதா வீட்டு வாசல் முன்பு விளையாடிக் கொண்டிருக்க வசந்தி சமையல் செய்து கொண்டிருந்தார்.
சமையலை முடித்துவிட்டு வந்து பார்த்த போது குழந்தை கவிதாவை காணவில்லை. உடனே பதறிப்போன வசந்தி அக்கம்பக்கத்தில் எல்லாம் தேடினார். ஆனால் பலனில்லை.
இது குறித்து கணேசன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். குழந்தை மாயமானதில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவரையும் காணவில்லை. அதனால் அவர் தான் குழந்தையைக் கடத்தியிருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகித்தனர். அவரைத் தேடிக் கண்டுபிடித்து விசாரித்ததில் கடன் தொல்லை தாங்க முடியாமல் வீட்டை விட்டு ஓடிவிட்டதாகத் தெரிவித்தார். இதனால் குழந்தை மாயமானதில் மர்மம் நீடிக்கிறது.
தென் சென்னை துணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன், தி.நகர் துணை கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் வடபழனி உதவி கமிஷனர் சீனிவாசன், விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சச்சிதானந்தம் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் குழந்தையைத் தேடி வருகின்றனர்.
குழந்தை புகைப்படத்துடன் கூடிய 300 போஸ்டர்கள் அடித்து அதை வடபழனி, விருகம்பாக்கம் பகுதிகளில் ஒட்டியுள்ளனர். இது குறித்து இதுவரை 100 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த தகவலும் இல்லை.
குழந்தை நகை அணிந்திருந்ததால் யாராவது நகைக்கு ஆசைப்பட்டு கடத்தியுள்ளனரா, அப்படி நகைக்காக கடத்துபவர்கள் நகையை எடுத்துக் கொண்டு குழந்தையை எங்காவது தவிக்க விட்டிருப்பார்களே. ஒரு வேளை குழந்தை எங்காவது தவித்துக் கொண்டிருக்கிறதா? அலல்து குழந்தை இல்லாதவர்கள் யாராவது கடத்தியிருக்கிறார்களா? என்பது போன்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications