உள்ளாட்சித் தேர்தல்: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரே நாளஇல் 157 பேர் மனு தாக்கல்
நெல்லை: உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கிய முதல் நாளே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 157 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 17,19 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 36 டவுன் பஞ்சாயத்துகள், 26 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள், 19 பஞ்சாயத்து யூனியன்கள், 425 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இதற்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த உள்ளாட்சிகளில் நேற்று காலை துவங்கியது.
நெல்லை மாவட்டதில் கோபாலசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு இருவரும், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தென்காசி, செங்கோட்டை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை பஞ்சாய்த்து யூனியன்களில் தலா ஒருவரும், கிராம பஞ்சாய்தது வார்டு உறுப்பினர் பதவிக்கு பாளையங்கோட்டை யூனியனில் 23 பேரும், கீழப்பாவூர் யூனியனில் 21 பேரும், நாங்குநேரியில் 11 பேரும், மானூரில் 10 பேரும், ஆலங்குளத்தில் 7 பேரும், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி யூனியன்களில் தலா 6 பேரும் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
கடையம், காளக்காட்டில் தலா 5 பேரும், செங்கோட்டை யூனியனில் 4 பேரும், மேலநீலிதநல்லூர் யூனியனில் 3 பேரும், குருவிகுளம், வள்ளியூர் யூனியனில் தலா இருவரும், ராதாபுரத்தில் ஒருவருமாக மொத்தம் 115 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடையநல்லூர், அம்பாசமுத்திரம், பாப்பாக்குடி, சேரன்மகாதேவி ஆகிய 4 பஞ்சாயத்து யூனியன்களில் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இதே போல் மாநகராட்சி மேயர், கவுன்சிலர், நகராட்சி தலைவர், கவுன்சிலர், பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் நேற்று ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் முதல் நாளான நேற்று மட்டும் 157 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications