மேலகரத்தில் உட்கட்சிப் பூசல்: உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கும் திமுக இளைஞரணி
தென்காசி: மேலகரத்தில் திமுக ஒன்றிய செயலாளர் துரை(எ) ராமையா மற்றும் டவுன் பஞ்சாயத்து செயலாளர் சுடலை ஆகியோரை கண்டித்து திமுக இளைஞரணியினர் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலகரம் டவுன் பஞ்சாயத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் திமுக ஒன்றிய செயலாளர் துரை(எ) ராமையா, டவுன் பஞ்சாயத்து செயலாளர் சுடலை ஆகியோர் மேலகரத்தில் உள்ள டவுன் பஞ்சாயத்து உறுப்பினர்கள் 9 பேரையும், கட்சி தொண்டர்களையும் மதிப்பதில்லை என்று புகார் கூறப்படுகிறது.
மேலும் அந்த இருவரும் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக இளைஞரணி அமைப்பாளர், வட்ட செயலாளர்கள், பிரதிநிதிகள் அறிவித்துள்ளளனர். இதனால் இப்பகுதியில் திமுக சார்பில் போட்டியிட எவரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications