பெற்ற தாயை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக சுயேச்சை வேட்பாளர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெற்ற தாயை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக சுயேச்சை வேட்பாளர் ஒருவரை சென்னை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மாநகராட்சியின் 140வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடுபவர் கருணாகரன். இவர் மனித உரிமை அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் மீது குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் பதிவானது.
அதில் கருணாகரன் தனது தாயார் சரோஜாவை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையின் இறுதியில் கருணாகரன் இன்று கைது செய்யப்பட்டார்.
மனித உரிமை அமைப்பின் நிர்வாகி, தனது தாயாரை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக கைதாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications