ஆள்மாறாட்ட அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் பொறுப்பின்றி பேசுகிறார் ரங்கசாமி- அதிமுக தாக்கு

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: தானே போய் பரீட்சை எழுதாமல், ஆள் மாறாட்டம் செய்து தேர்வை எழுதி, புதுச்சேரிக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல், அதிமுக மீது பழியைப் போட்டு பொறுப்பில்லாமல் இருக்கிறார் முதல்வர் ரங்கசாமி என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத திண்டிவனத்தில் விலாசம் கொடுத்தது கல்வி அமைச்சர். அமைச்சருக்கு பதிலாக வேறு ஒருவரை தேர்வு எழுத வைத்தது கல்வி அமைச்சர். இவ்வளவு நற் காரியங்களையும் செய்துவிட்டு ஆள் மாறாட்டத்தில் பிடிபட்ட பிறகு இதற்கு காரணம் அ.தி.மு.க.வின் அரசியல் காரணம்தான் என முதல்வர் கூறி இருப்பது, குற்றச்செயலை திசை திருப்பி குற்றவாளியை காப்பாற்றும் செயலாகும்.

ரங்கசாமி முதல்வர் என்ற பொறுப்பில் இருந்துக்கொண்டு தனது கடமையை செய்யாமல் பொறுப்பற்ற முறையில் பிறர் மீது திசை திருப்பும் பணியை செய்வது அழகல்ல. கல்வி அமைச்சரால் சட்டசபையின் புனிதம், மாண்புகள் சீர் குலைத்ததோடு அமைச்சரை காப்பாற்ற சட்ட விரோத செயல்கள் ஆளும் கட்சியால் சட்டசபை வளாகத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

குற்றச்சாட்டுகளுக்கு ஆளக்கப்பட்டுள்ள ஒரு அமைச்சரை சட்டசபைக்குள்ளேயே கைது செய்து விடுவார்கள் என பயந்து சட்டமன்ற வளாகத்தின் முன் வாசல், பின்வாசல் என 3 கேட்டுகளையும் பூட்ட வேண்டிய அவசியம் என்ன? அதுவும் ஞாயிற்றுக்கிழமை என்று பாராமல் பணி செய்ய சட்டமன்றத்திற்கு சபாநாயகரும், அரசு கொறடாவும் இருக்கும் போதே சட்டமன்ற வாயில்கள் பூட்டு போட்டது எவ்வளவு பண்புள்ள உயர்ந்த காரியம்.

சட்டசபை வளாகத்தை பூட்ட உத்தரவிட்டது யார் என்பதை கவர்னர் விசாரிக்க வேண்டும். நமது ராஜசபா எம்.பி. கண்ணனிடம் கேட்டாலே தப்பிற்கும், தவறுக்கும் அழகழகா பல்வேறு வித்தியாசமான காரணங்களை கூறுகிறார். இதில் இருந்து கல்வி அமைச்சரை காப்பாற்ற வழியை முதல்வரிடம் கேட்கலாம். ஏன் என்றால் காங்கிரஸ்காரர் என்று கூறுகிறார்.

முதல்வரும், காங்கிரஸ்காரர்தான் என்றால் காங்கிரஸ் கட்சியில் உள்ள கண்ணன் யாருக்கு ஓட்டு கேட்டார். காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு கேட்டரா? ரங்கசாமியும் காங்கிரஸ்தான் என கூறுவதால் ரங்கசாமியின் ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு கேட்டாரா? ஒன்றுமே புரியவில்லை என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+