எங்களால் மட்டுமே நேர்மையான நிர்வாகத்தை அமைக்க முடியும்: தா. பாண்டியன்

Subscribe to Oneindia Tamil

சிவகிரி: நேர்மையான, திறமையான நிர்வாகத்தை எங்களால் மட்டுமே அமைக்க முடியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சிவகிரி டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரணவீறு மற்றும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரி்த்து அக்கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் சிவகிரியில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

உள்ளாட்சி அமைப்பு சிறந்த முறையில் செயல்பட்டால் தான் ஜனநாயகம் சிறந்த முறையில் இயங்கும். உள்ளாட்சி பொறுப்புகளுக்கு வருபவர்கள் நேர்மையானவர்களாகவும், திறமை வாய்ந்தவர்களாகவும், மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களால் தான் சிறந்த நல்ல நிர்வாகத்தினைத் தர முடியும்.

மக்களோடு மக்களாக பழகியவர்களால் தான் மக்களின் தேவைகளை அறிந்து, அதன் அவசரம் கருதி உடனடியாக பூர்த்தி செய்து கொடுக்க முடியும். எனவே ஏழை, எளிய, பாட்டாளி தோழர்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரணவீறுக்கு வாக்களியுங்கள்.

கூட்டணி கட்சியினருக்கு அந்தந்த சின்னங்களில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். நேர்மையான, திறமையான நிர்வாகத்தை எங்களால் மட்டுமே அமைக்க முடியும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+