மூணாறு விடுதியில் தமிழக பெண் கொலை; உடன் வந்தவருக்கு வலைவீச்சு

Subscribe to Oneindia Tamil

மூணாறு: மூணாறு விடுதியில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டார். அவருடன் தங்கியிருந்த, அவரது கணவராக கருதப்படும் மகேஷ் என்பவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம், மூணாறு பார்வதி அம்மன் கோவில் அருகே தனியார் தங்குவிடுதி ஒன்று உள்ளது. இங்கு கடந்த 7ம் தேதியன்று இளம்ஜோடி ஒன்று வந்தனர். தங்கள் 2 பேரும் கணவன்-மனைவி என அறிமுகப்படுத்திக் கொண்டு, அறை எடுத்தனர்.

தஙகள் பெயர் மகேஷ், சியாமளா என தெரிவித்த 2 பேரும், கடந்த 3 நாட்களாக மூணாறு பகுதியை சுற்றி பார்த்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் அடங்கியது. இந்த நிலையில் இன்று காலையில் வெகுநேரமாகியும், அந்த ஜோடி தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர்.

அப்போது அறையில் சியாமளா பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்ற பார்த்த போது சியாமளா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தது தெரிந்தது.

அந்த அறையை சோதனையிட்ட போது, சியாமளாவின் பேக் ஒன்றும், அதில் பெங்களூர் தனியார் கம்பெனியின் கடிதமும் இருந்தது. அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்தனர். இதில் சியாமளா அந்த நிறுவனத்தில் வேலை செய்ததும், சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது.

அந்நிறுவனம் அளித்த முகவரியை தொடர்பு கொண்ட போது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பே அங்கிருந்த வீட்டை காலி செய்ததாக தெரியவந்தது. விடுதியில் அறை எடுத்த போது 2 பேரும் சென்னையில் வேலை செய்வதாக அறை எடுத்துள்ளனர்.

விடுதி ஊழியர்களின் உதவியுடன் வரையப்பட்ட படத்தை கொண்டு, சியாமளாவுடன் தங்கிருந்த நபரான மகேசைப் பிடிக்க தனிப்படை அடைக்கப்ப்டடுள்ளது. மேலும் கேரளா, தமிழக எல்லைகளில் உள்ள போலீஸ் நிலையங்களிலும், மகேஷ் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட சியாமளாவின் கேமரா, செல்போன் உள்ளிட்ட முக்கிய பொருட்களை மகேஷ் எடுத்து சென்றுள்ளதாக தெரிகிறது.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மகேஷ், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பெற்றோரை எதிர்த்து, சியாமளாவை மகேஷ் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சென்னையை சேர்ந்த பெண்ணை, மூணாறுக்கு சுற்றுலா அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+