6 நாட்களுக்கு டாஸ்மாக் 'லீவு'-கடைசி நாளில் சரக்குகளை வாங்கி ஸ்டாக் வைத்த குடிமக்கள்!

முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நாளையும், 2வது கட்ட தேர்தல் 19ம் தேதியுடம் நடைபெறுகிறது. 21ம் தேதி வாக்கு எணிக்கை நடைபெறவுள்ளது.
இதையடுத்து அக்டோபர் 15ம்தேதி மாலை 5 மணி முதல் 19ம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் மதுக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் 21ம் தேதியன்றும் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து நேற்று மாலை 5 மணியுடன் கடைகள் மூடப்பட்டன. கடைகள் 6 நாட்களுக்கு இருக்காது என்பதால் மது வகைகள் கிடைக்காமல் திண்டாடி திணறிப் போய் விடக் கூடாது என்பதற்காக குடிமக்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்து விட்டனர். தங்களுக்குத் தேவையான அளவுக்கு மது வகைகளை குறிப்பாக பீர்களை அதிக அளவில் வாங்கிச் சென்றனர்.
டாஸ்மாக் மதுக் கடைகளில் விற்பனை பெருமளவில் சரிந்து விட்டதாக அரசு கவலையுடன் இருந்து வந்தது. ஆனால், கடந்த 2 வாரங்களாக டாஸ்மாக் விற்பனை சற்று அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களாக டாஸ்மாக் கடைகளில் தினமும் கூடுதலாக ரூ.15 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனை ஆகின்றன. வழக்கமாக தினசரி விற்பனை ரூ.52 கோடி என்ற அளவில் இருக்கும், ஆனால், தற்போது விற்பனை ரூ.67 கூடியாக அதிகரித்து இருக்கிறது. இதனால் அரசு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
தினசரி ஒரு லட்சத்து 30 ஆயிரம் பெட்டிகள் விற்பனை ஆகி வந்த நிலையில் இப்போது ஒரு லட்சத்து 70 ஆயிரம் பெட்டிகளாக உயர்ந்துள்ளது. முன்பு தினமும் 70 ஆயிரம் பெட்டி பீர் பாட்டில்கள் விற்பனை ஆகும். இது தற்போது ஒரு லட்சம் பெட்டிகளாக அதிகரித்து இருக்கிறது. நேற்று முன்தினம் விற்பனை ரூ.92 கோடியை எட்டியது. நேற்று ரூ.60 கோடி அளவுக்கு விற்பனை நடந்தது.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாட்கள் விடுமுறை என்பதால் இந்த அதிவேக விற்பனைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications