இரட்டை இலைக்கே மக்கள் வாக்களித்து வருகின்றனர்- அமைச்சர் செந்தூர்ப்பாண்டியன்

தமிழகத்தில் 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாகவும், சில இடங்களில் இயந்திர கோளாறோடும், விறுவிறுப்பாக நடந்தது.
செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே பொதுமக்கள் வாக்குகளை பதிவு செய்ய அதிகளவு திரண்டிருந்தனர். செங்கோட்டை நகராட்சி தலைவர், மற்றும் உறுப்பினர் தேர்தலில் 10வது வார்டில் அமைந்துள்ள ஏ.ஜி தொடக்கப்பள்ளியில் கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் வாக்களித்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் மக்களுக்காக அறிவித்துள்ளார். அத்திட்டங்கள் மேலும் விரிவடையவும், இன்னும் பலவேறு திட்டங்கள் மக்களுக்கு கிடைத்திடவும் வேண்டும். இச்சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்தேன். வாக்காள பெருமக்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து வருகின்றனர் என்றார்.
இதற்கிடையே, பிற்பகல் 2 மணி நிலவரப்படி நெல்லை நகராட்சிப் பகுதிகளில் 52 சதவீத அளவிலும், ஊரகப் பகுதிகளில் 63 சதவீத அளவிலும் வாக்குப் பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications