ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் டிசம்பர் மாத இறுதிக்குள் நாடு திரும்பும்: ஒபாமா
வாஷிங்டன்: ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் இந்தாண்டு இறுதிக்குள் வாபஸ் பெறப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.
ஈராக்கில் நிரந்தர அரசு அமைந்து, தீவிரவாதிகள் மற்றும் அண்டை நாடுகளின் தாக்குதல்களை முறியடிக்க, அமெரிக்க படைகள் ஈராக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தது. அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற பின்னும், அமெரிக்க படைகள் நாடு திரும்பவில்லை.
இந்த நிலையில் ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் முழுவதுமாக திரும்ப அழைத்து கொள்வதாக ஒபாமா தெரிவித்துள்ளார். ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகி உடனான வீடியோ கான்பரன்சிங் சந்திந்து பேசிய பிறகு இதை ஒபாமா தெரிவித்தார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிக்கையில் பத்திரிக்கையாளரிடம் கூறியதாவது, முன்னாள் அதிபர் சதாம் அசேன் மறைவுக்கு பின், அந்நாட்டில் அமைதி திரும்ப ஆரம்பித்துவிட்டது.
ஆனால் பல வெளிநாட்டு அமைப்புகளால் ஈராக் நாட்டிற்கு தொடர்ந்து அச்சறுத்தல் இருந்ததால், அமெரிக்க படைகள் அங்கேயே தங்கியிருந்தது. தற்போது ஈராக்கில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த 9 ஆண்டுகளாக ஈராக்கில் இருந்த அமெரிக்க படைகள் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் நாடு திரும்பிவிடுவர். இதற்காக சிறு சிறு பகுதிகளாக அமெரிக்கா படைகள் திரும்ப அழைத்து கொள்ளப்படுவர்.
ஆனால் ஈராக்கின் வளர்ச்சிக்கு, அமெரிக்கா தொடர்ந்து உதவும். ஈராக் வருங்காலத்தில் சிறந்த நிலையை அடைவர். பாக்தாத்தில் அமெரிக்கா தூதரகம் தொடர்ந்து செயல்படும். இந்தாண்டு கிருஸ்துமஸ் பண்டிகைக்கு முன், போர் முடிந்த நிறைவு விழா கொண்டாட உள்ளோம். அதற்காக ஈராக்கில் உள்ள படைகளை விரைவில் திரும்ப அழைத்து கொள்வோம். பாக்தாத்தில் உள்ள அமெரிக்க படைகளின் பாதுகாப்புக்கு மட்டும் சிறிய அளவிலான படை, ஈராக்கில் இருக்கும், என்றார்.












Click it and Unblock the Notifications