ப.சிதம்பரத்தை விசாரிக்க கோரும் சாமியின் மனு-சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு காத்திருக்க சிபிஐ நீதிமன்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரத்தையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை ஏற்பதா இல்லையா என்பது குறித்த விசாரணையை வரும் நவம்பர் 8ம் தேதிக்கு டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றம் ஒத்தி வைத்துவிட்டது.
2ஜி ஊழலைத் தடுக்க நிதியமைச்சராக இருந்த இப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தவறிவிட்டதாகவும், இதனால் அவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும், இதனால் அவரையும் குற்றவாளியாக வேண்டும் என்றும் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் சாமி மனு தாக்கல் செய்தார்.
அதே போல ஸ்பெக்ட்ரம் முறைகேடாக விற்கப்படுவதைத் தடுக்கவோ, இந்த விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் முயற்சிகளுக்கு தடை விதிக்கவோ சிதம்பரம் முயற்சிக்கவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்திலும் சாமி இன்னொரு மனு தாக்கல் செய்தார்.
ஆனால், சிதம்பரத்தை விசாரிப்பதற்கு மத்திய அரசும் சிபிஐயும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந் நிலையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிராக பிரணாப் முகர்ஜி தலைமையிலான மத்திய நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு எழுதிய குறிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. (அதில், கடைசி நேரத்தில் ஸ்பெக்ட்ரம் விற்பனையை ரத்து செய்ய அதிகாரம் இருந்தும் கூட அதை சிதம்பரம் செய்யவில்லை. இதனால் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது என்று கூறப்பட்டிருந்தது.)
இந் நிலையில் சாமியின் மனு இன்று பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே கோரிக்கையை முன் வைத்து உச்ச நீதிமன்றத்தில் சாமி தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை காத்திருக்கப் போவதாக அறிவித்த நீதிபதி, இதில் அடுத்த கட்ட விசாரணையை வரும் நவம்பர் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications