சிறையில் மெழுகுவர்த்தி ஏற்றி தீபாவளி கொண்டாடிய ராசா-சிறப்பு வழிபாடு நடத்திய எதியூரப்பா!

இந்தியாவின் மிகப் பெரிய சிறைசசாலையான இங்கு 11,000 கைதிகள் உள்ளனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் போன்றவற்றில் சிக்கிய மிக முக்கிய விவிஐபி கைதிகளும் இந்தச் சிறையில் தான் உள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைதிகளுக்கு சிறப்பு உணவு வகைகள் வழங்கப்பட்டன. மதிய உணவாக தந்தூரி ரொட்டி மற்றும் பன்னீருடன் காய்கறி வகைகள் கொடுக்கப்பட்டன. மாலையில் லட்டு, பர்பி, ஜிலேபி போன்ற இனிப்புகளும் வினியோகிக்கப்பட்டன.
மேலும் சிறப்பு பிரார்த்தனை கூட்டமும் நடத்தப்பட்டது. ஆனால், பாதுகாப்பு கருதி விவிஐபி கைதிகள் மட்டும் இதில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
சிறை கேண்டீனில் தீபாவளி தீபம் ஏற்றுவதற்காக மெழுகுவர்த்திகள் விற்பனை செய்யப்பட்டன. ஏராளமான கைதிகள் தங்கள் அறை முன் மெழுகுவர்த்திகளை ஏற்றினர்.
ராசாவும் தனது அறை முன் மெழுகுவர்த்தியை ஏற்றி, தீபாவளி கொண்டாடினார்.
தீபாவளி தினம் விடுமுறை தினம் என்பதால், அன்று கைதிகளை உறவினர்கள் யாரும் சந்திக்க அனுமதி தரப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதியூரப்பாவின் சிறை தீபாவளி:
அதே போல நில மோசடி வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக மாஜி பாஜக முதல்வர் எதியூரப்பா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச் சாலையில் கைதிகளுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.
காலை 5 மணிக்கு எழுந்துவிட்ட எதியூரப்பா சிறைக்குள்ளேயே லட்சுமி படத்தை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் 2 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.
தீபாவளியையொட்டி வீட்டிலிருந்து அவருக்கு சிறப்பு உணவு வரவழைக்கப்பட்டிருந்தது.
அவரது சக கைதிகளான முன்னாள் அமைச்சர் கிருஷ்ணய்ய ஷெட்டி, மாநகராட்சி பாஜக கவுன்சிலர் கட்டா ஜெகதீஷ் ஆகியோர், எதியூரப்பாவுக்கு நேரில் தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications