மும்பையில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்- தனிப்பட்ட பயணம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தனிப்பட்ட பயணமாக மும்பை வந்துள்ளார். இத்தகவலை காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மும்பை காவல்துறை இணை ஆணையர் ரஜ்னீஷ் சேத் கூறுகையில், ஜார்ஜ் புஷ் தனிப்பட்டமுறையிலான பயணத்தை மேற்கொண்டு மும்பை வந்துள்ளார். அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் புதன்கிழமை மும்பையிலிருந்து புறப்பட்டுச் செல்வார் என்றார்.
புஷ் எதற்காக வந்துள்ளார் என்ற கேள்விக்கு பாதுகாப்பு காரணங்களால் அது குறித்து கூற இயலாது என்றார் சேத்.
இதுகுறித்து அவர் கூறுகையில், புஷ் எதற்காக வந்துள்ளார், எங்கு தங்கியுள்ளார், என்ன செய்யப் போகிறார் என்பதை பாதுகாப்பு காரணங்களுக்காக தெரிவிக்க இயலாது என்றார்.












Click it and Unblock the Notifications