ஹசாரேவுடன் எங்களுக்கு நீண்டகாலமாக தொடர்பு உண்டு: ஆர்எஸ்எஸ்

அன்னா ஹசாரே ஆர்எஸ்எஸ்சின் முகமூடி என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், இதை ஹசாரேவும் பாஜகவும் மறுத்து வருகின்றன. இந் நிலையில் கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசிய மோகன் பகவத்,
ஊழலுக்கு எதிரான தனது இயக்கத்தில் ஆர்எஸ்எஸ்சும் சேர வேண்டும் என்று அன்னா ஹசாரே கோரிக்கை வைத்தால் அதை ஏற்போம். ஆனால், இதுவரை அப்படிப்பட்ட கோரிக்கை ஏதும் அவரிடமிருந்து வரவில்லை. அதே நேரத்தில் அன்னாவின் இயக்கத்தில் சேர ஆர்எஸ்எஸ் தொண்டர்களை நாங்கள் தடுக்கவில்லை.
எங்களுக்கும் ஹசாரேவுக்குமான தொடர்பு நீண்ட காலம் பின்னோக்கியது. கிராமப் புறங்களில் ஹசாரே மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை வெளியுலகுக்குத் தெரிய வைத்தது ஆர்எஸ்எஸ் தான். எங்களது கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களில் கூட ஹசாரே எங்களுக்கு உதவினார்.
கிராம வளர்ச்சிக்காக இணைந்து செயல்பட்டபோது தான் ஊழலுக்கு எதிராக இயக்கத்தைத் துவக்குமாறு ஹசாரேவுக்கு ஆர்எஸ்எஸ் யோசனை சொன்னது. நான் கடந்த ஜூன் மாதத்தில் ஹசாரேவை சந்திப்பதாகக் கூட இருந்தது. ஆனால், இருவரும் வேறு சில பணிகளில் தீவிரமாக இருந்ததால் சந்திப்பு நடக்கவில்லை.
ஊழலுக்கு எதிரான இயக்கம் தொடங்குவது தொடர்பாக பாபா ராம்தேவிடம் கூட ஆர்எஸ்எஸ் ஆலோசனை நடத்தியது. ஆனால், ஹசாரேவுடன் இணைந்து செயல்படுமாறு ராம்தேவை நாங்கள் வலியுறுத்த முடியாது. அதே நேரத்தில் ஹசாரேவின் இயக்கத்தில் ஒரு பங்கு வகிக்குமாறு ராம்தேவிடம் கோரியுள்ளோம்.
மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகள் ஆட்சி முடிந்து மக்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது.
திபெத் கொடியையோ அல்லது சுதந்திர திபெத் தொடர்பான போஸ்டர்களையோ காட்ட வேண்டாம் என்று ஒரு சினிமா தயாரிப்பாளருக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் சீனாவின் கோபத்துக்கு ஆளாவோம் என மத்திய அரசு நினைக்கிறது. இந்திய சினிமாவில் திபெத் கொடியைக் காட்டினால் என்ன தப்பு? என்றார் பகவத்.
பகவத்தும் ஹசாரேவும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications