For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயகாந்தை முற்றுகையிட்ட மக்கள்-கைகலப்பில் இறங்கிய தேமுதிகவினர்..பத்திரமாக அனுப்பி வைத்த போலீசார்

By Chakra
Google Oneindia Tamil News

Vijayakanth
திருப்பூர்: திருப்பூரில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட வந்த சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரான விஜயகாந்த்தை பொது மக்கள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொது மக்களுக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் தலையிட்டு விஜய்தாந்தை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

பார்க்காமலேயே காதல் மாதிரி சட்டசபையில் பேசாமலேயே பெரும்பாலான நேரத்தை கழித்தவர் விஜய்காந்த்.

இந் நிலையில் திருப்பூரில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல விஜயகாந்த் கோவை வந்தார். கோவையில் இருந்து காரில் திருப்பூர் வந்த அவர், காங்கயம் ரோட்டில் உள்ள சத்யா நகர் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை விஜயகாந்த் பார்வையிட்டார்.

வீடு, உடமைகளை இழந்த பெண்கள் கண்ணீருடன் விஜயகாந்திடம் புகார் கூறினா். மீட்பு, நிவாரண பணிகள் தாமதமாக நடப்பதாகவும், வீடுகளில் தேங்கிய சேறு, சகதிகளை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் யாருமே வரவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

உடனே, அவர்களிடம் நான் அரசியல் பண்ண இங்கு வரவில்லை. உங்களுக்கு என்ன நிவாரண பணிகள் வேண்டுமோ, அதை கேளுங்கள். என்னால் முடிந்த அளவுக்கு நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை செய்கிறேன். பாதிக்கப்பட்ட உங்களுக்கு உரிய வெள்ள நிவாரண உதவிகள் கிடைப்பதற்கு சட்டசபையில் நான் பேசுவேன் என்றார்.

தொடர்ந்து அந்த ஏரியாவை ஒரு சுற்று சுற்றி வந்த விஜய்காந்த், பி.கே.ஆர்.காலனி, வெள்ளியங்காடு, முத்தையன் நகர் பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டார்.

இந் நிலையில் நிவாரண உதவி கிடைக்காத பெரியதோட்டம் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் காங்கயம் ரோடு தொலைபேசி நிலையம் முன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. தங்கவேலு சாலை மறியல் நடந்த இடத்துக்கு வந்து பேச்சு நடத்தினார். ஆனால் சாலை மறியலை கை விட மறுத்துவிட்டு மேயருக்கு எதிராக மக்கள் கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.

பொதுமக்கள் சாலை மறியல் செய்வதை அறிந்த விஜய்காந்த், அந்தப் பக்கமாக வண்டியைத் திருப்பினார். அவரிடம் போலீசார், சாலை மறியல் நடக்கிறது. அதனால் மாற்று பாதையில் செல்லுங்கள் என்றனர்.

ஆனால், அந்த மக்களை சந்தித்து குறைகளை கேட்டுவிட்டுத் தான் போவேன் என்று வசனம் பேசியபடி விஜய்காந்த் அங்கு சென்றார்.

விஜயகாந்த் வந்ததை அறிந்து அவரது காரை மக்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அப்போது அங்கு நின்றிருந்த சிலர், சட்டசபையில் பேசதாவர் இப்ப எதுக்கு இங்கே வந்தாரு என்று கேட்டபடி விஜயகாந்துக்கு எதிராக கோஷமிட்டனர். சிலர் அவரது காரை கைகளால் ஓங்கி அடிக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து அவர்கள் தேமுதிக தொண்டர்கள் தாக்கினர். இதைப் பார்த்த பொது மக்கள் தேமுதிகவினரை திருப்பி அடித்தனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விஜயகாந்தை பாதுகாப்பாக காரில் ஏற்றி அங்கிருந்து உடனடியாக திருப்பி அனுப்பி வைத்தனர்.

English summary
People gheraoed DMDK leader Vijaykanth near Tirupur when he visited to the flood affected areas
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X