குடித்துவிட்டு பெண்களுடன் உல்லாசம்: கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் குடித்துவிட்டு வந்து அடித்து உதைப்பது தொல்லை கொடுத்து வந்த கணவன் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கத்தில் உள்ள ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் பாலாஜி(32). இவருக்கு நாகம்மாள்(30) என்ற மனைவியும், கதிர்(12), பவித்ரா(10), முருகன்(7), காவியா(2) ஆகிய 4 குழந்தைகளும் உள்ளனர். குடிப்பழக்கம் கொண்ட பாலாஜி தினமும் வீட்டுக்கு குடித்து விட்டு வந்து நாகம்மாளை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்தார்.
பல பெண்களை வீட்டுக்கு அழைத்து வந்த பாலாஜி, நாகம்மாளின் கண் முன்னே அவர்களுடன் உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம் போல குடித்து விட்டு வீட்டுக்கு வந்த பாலாஜி மனைவியை அடித்து உதைத்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் நாகம்மாளும் அவரை பிடித்து அடித்துள்ளார். போதை மற்றும் அடி வாங்கிய களைப்பில் பாலாஜி படுத்து தூங்கிவிட்டார்.
இரவு 2 மணிக்கு கண்விழித்த நாகம்மாள், தூங்கி கொண்டிருந்த கணவன் பாலாஜி மீது பெரிய கல் ஒன்றை எடுத்து போட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பாலாஜி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தகவல் அறிந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பாலாஜியை கொலை செய்த நாகம்மாளை கைது செய்த போலீசார், மேலும் விசாரித்து வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications