நவ.15 வரை கே.என். நேருவை கைது செய்ய தடை– உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: முன்னாள் அமைச்சர் கே.என் நேருவை கைது செய்வதற்கான தடையை நவம்பர் 15 -ம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் கலைஞர் அறிவாலயம் கட்ட டாக்டர் சீனிவாசன் என்பவரது நிலத்தை ஆக்கிரமித்த வழக்கு மற்றும் கொட்டப்பட்டுவில் கருணாநிதி என்பவர் நிலத்தை அபகரித்த வழக்கு உள்பட 5 வழக்குகள் கே.என்.நேரு மீது போடப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர் 32 நாட்கள் வரை கடலூர் சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
இந்த நிலையில் திருச்சியில் திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்தியதாக கே.கே.நகரை சேர்ந்த மொரய்ஸ் என்பவர் கொடுத்த புகாரில் கே.என்.நேரு மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் அப்போது அவர் கடலூர் சிறையில் இருந்ததால் அவரை கைது செய்ததாக கூறிய போலீசார் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். ஆனால் கைது செய்த 24 மணி நேரத்துக்குள் கோர்ட்டில் கே.என்.நேருவை ஆஜர்படுத்தாததால் அவரை ரிமாண்ட் செய்ய உத்தரவிட முடியாது என மாஜிஸ்திரேட் மகேஸ்வரி பானுமதி ரேகா கூறினார்.
இதை எதிர்த்து அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என். நேரு, அவரது சகோதரர் ராமஜெயம், துணை மேயர் அன்பழகன் ஆகியோர் கடந்த 9-ந்தேதி திருச்சி கோர்ட்டில் சரண் அடையும்படி உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றம் தடை உத்தரவு
இதை எதிர்த்து கே.என். நேரு தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நேரு ஆஜர் ஆக தடை விதிக்ககூடாது என வாதிட்டார். ஆனால் அப்போது அரசு தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யாததால் அந்த மனுவை கடந்த 9-ந்தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும் கே.என். நேருவை கடந்த 11-ந் தேதி வரை கைது செய்ய தடை விதித்தது. இதனால் 11-ந்தேதிக்கு பிறகு கே.என்.நேரு உள்ளிட்டோர் மீண்டும் கைதாகலாம் என்ற எதிர்பார்ப்பு உருவானது.
இந்த நிலையில் கே.என்.நேரு தரப்பில் கைது தடையை நீட்டிக்ககோரி உச்சநீதி மன்றத்தில் மீண்டும் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எஸ்.எஸ்.நிஜார், அல்டாம்ஸ் கபீர் ஆகியோர் கே.என்.நேருவை கைது செய்ய உள்ள தடையை 9-ந் தேதியில் இருந்து 15-ந் தேதி வரை நீட்டித்து உத்தர விட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications