தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆசிட் குழாய் உடைந்து ஃபிட்டர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆசிட் குழாய் உடைந்ததில் ஃபிட்டர் பாண்டியன் என்பவர் பலியானார், என்ஜினியர் சுரேஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் பாண்டியன்(40). அவர் அங்குள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஒப்பந்தம் அடிப்படையில் ஃபிட்டராக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் பசுவந்தனை தெற்கு தீர்த்தம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கெமிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று அதிகாலை அவர்கள் இருவரும் அங்குள்ள பாஸ்பரிக் ஆசிட் பிளாண்ட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராவிதமாக ஆசிட் குழாய் உடைந்து இருவர் மீதும் ஆசிட் கொட்டியது. இதில் உடல் வெந்த அவர்களை தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பாண்டியன் சிகிச்சை பலனின்றி இறந்தார். சுரேஷ்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ரூரல் டிஎஸ்பி ஜெயக்குமார், சிப்காட் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications