வங்கி காவலாளி கொலை வழக்கு: துப்பு துலங்காததால் ஜோதிடரிடம் குறிகேட்ட போலீசார்

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே வங்கி காவலாளி கொலை வழக்கில் ஒரு மாதமாகியும் துப்பு கிடைக்காததால் போலீசார் ஜோதிடரிடம் குறி கேட்டுள்ளனர்.

சங்கரன்கோவில் தாலுகா திருவேங்கடம் அருகே உள்ள நடுவப்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் காவலாளி ராமராஜ் என்பவர் கடந்த மாதம் 25ம் தேதி நள்ளிரவு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். திருவேங்கடம் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளி யார் என்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் பற்றிய துப்பு கிடைக்காததால் எஸ்பி விஜயேந்தி பிதாரி உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார் வங்கி செயலாளர் மற்றும் ஊழியர்கள், ஊர் பிரமுகர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போதும் எவ்வித துப்பும் துலங்கவில்லை. இதையடுத்து தனிப்படையில் உள்ள சில போலீசார் எட்டயபுரம் அருகே கீழஈரல் பகுதியில் உள்ள மஞ்சநாயக்கன்பட்டியில் குறிசொல்லும் சோதிடர் ஒருவரை சந்தித்து இந்த கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் சிக்குவார்களா என்று கேட்டுள்ளனர்.

இது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை மட்டுமல்லாமல் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திறமையாக புலனாய்வு செய்து குற்றவாளியைப் பிடிக்காமல் இப்படி குறி கேட்டு போனால் எப்படி என்று பொதுமக்கள் புலம்புகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+