அஸ்ஸாம், நாகாலாந்து, மணிபூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
குவாஹாத்தி: வடகிழக்கு இந்தியா, மியான்மர் மற்றும் பங்களாதேஷில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியிருந்தது.
இன்று காலை 8.47 மணிக்கு வடகிழக்கு இந்தியா, மியான்மர் மற்றும் பங்களாதேஷில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு அஸ்ஸாம், நாகாலாந்து மற்றும் மணிபூரிலும் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் மணிபூர் தலைநகர் இம்பாலிலின் கிழக்கில் இருந்து 130 கிமீ தொலைவில் உள்ள மியான்மரை மையமாகக் கொண்டு ஏற்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிபூர் நில நடுக்கம் ஏற்படும் இடத்தில் அமைந்துள்ளது என்று புவி அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1897ம் ஆண்டு இந்த பகுதியி்ல் 8.7 அளவுக்கு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 1,600 பேர் பலியாகினர். இது தான் இந்த பகுதியில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கம் ஆகும்.
கடந்த செப்டம்பர் மாதம் இந்த பகுதியில் 6.8 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications