விலைவாசி உயர்வு, தெலுங்கானா குறித்து தொடர் அமளி: இரு அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு
டெல்லி: விலைவாசி உயர்வு மற்றும் தெலுங்கானா விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் இன்று 2வது நாளாக நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. துவங்கிய முதல் நாளே உபி விவகாரம், 2ஜி ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற விவகாரங்களை எழுப்பி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் இன்று 2வது நாள் கூட்டம் துவங்கியது.
லோக்சபாவில் விலைவாசி உயர்வு குறித்து வாக்கெடுப்பில்லா விவாதம் துவங்கியது. இதற்கிடையே அவை துவங்கிய 7வது நிமிடத்திலேயே தெலுங்கானா ஆதரவாளர்கள் தனிதெலுங்கானா கேட்டு அமளியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து விலைவாசி உயர்வு குறித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
கருப்பு பணம் மற்றும் விலைவாசி உயர்வு குறித்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை பாஜக அளித்தது. வாக்கெடுப்பு நடத்துமாறு அது வலியுறுத்துகிறது.
பாஜகவும், இடதுசாரிகளும் கூட்டாக சேர்ந்து செயல்படுகின்றன. பாஜக இடதுசாரிகளின் விலைவாசி உயர்வுக்கு எதிரான ஒத்திவைப்பு தீர்மானத்திற்கும், இடதுசாரிகள் கருப்புப் பணத்திற்கு எதிரான பாஜகவின் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கும் ஆதரவளிக்கின்றன.
விலைவாசி உயர்வு குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் மீரா குமார் அவையை மதியம் வரை ஒத்திவைத்தார். அவை மீண்டும் கூடியதும் எதிர்கட்சிகள் தெலுங்கானா மற்றும் விலைவாசி உயர்வு குறித்து தொடர் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து அவை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதே போன்று ராஜ்யசபாவிலும் தெலுங்கானா மற்றும் விலைவாசி உயர்வு குறித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அந்த அவையும் இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications