ஆள்மாறட்ட அமைச்சர் கல்யாணசுந்தரத்தின் பாஸ்போர்ட்டை முடக்க போலீஸ் முடிவு
சிதம்பரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஆள் வைத்து எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள புதுச்சேரி அமைச்சர் கல்யாணசுந்தரத்தின் பாஸ்போர்ட்டை முடக்க முடிவு செய்துள்ளதாக வடக்கு மண்டல ஐ.ஜி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கைதிலிருந்து தப்ப கடைசி முயற்சியாக கல்யாணசுந்தரம் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியுள்ளார். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
கல்யாணசுந்தரம் கடந்த செப்டம்பர் மாதம் திண்டிவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியபோது ஆள்மாறட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட குற்றவியல் போலீசார் கல்யாணசுந்தரம் மீது ஜாமீனில் வெளி வர முடியாத வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து கல்யாணசுந்தரம் தலைமறைவானார்
அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. கல்யாண சுந்தரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம் கடந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து இடைக்கால தடையின் போது பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்ற கல்யாணசுந்தரம் மீண்டும் தலைமறைவானார்.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
கல்யாணசுந்தரத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தியதை அடுத்து முதல் அமைச்சர் ரங்கசாமி அவரை அமைச்சர் பதவியில் நீக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். குடியரசுத்தலைவர் ஆளுநரின் பரிந்துரை கடிதத்தை ஏற்றுக் கொண்டதை அடுத்து அமைச்சர் பதவியை இழந்தார் கல்யாணசுந்தரம்.
இதற்கிடையே கல்யாணசுந்தரம் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
பாஸ்போர்டை முடக்க முடிவு
இந்த நிலையில் தமிழ்நாடு போலீசார் கல்யாணசுந்தரத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது அவரது பாஸ்போர்ட்டை முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாக வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
கல்யாணசுந்தரத்தை கைது செய்ய புதுவையில் 3 தனிப்படைகள் தங்கி கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார். தேர்வு எழுத அவருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியர் ஆதவனையும் தீவிரமாக தேடி வருவதாக கூறிய சைலேந்திரபாபு, விரைவில் கல்யாணசுந்தரம், ஆதவன் அகியோர் கைது செய்யப்படுவார்கள் என்றார்.
திண்டிவனம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கல்யாணசுந்தரம் இன்று ஆஜராகவேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications