அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்றம் தடை
மதுரை: தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க மதுரை உயர் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு தற்போதைய நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அவருடைய மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத், தம்பி ராஜா, அவருடைய மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி பாலமுருகன், அவருடைய மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மிது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மதுரையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசராணைக்கு வந்ததது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம்சாட்டபப்ட்ட அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் வரும் 28ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 பேர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், "சொத்துகுவிப்பு வழக்கை வேறு ஒரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அதுவரை கீழ் நீதிமன்ற விசராணைக்கு தடைவிதிக்க வேண்டும். வரும் 28ம் தேதி கீழ் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும்," என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி வி.பெரியகருப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் கீழ் நீதிமன்ற விசாரணைக்கு தடைவிதித்ததுடன், வரும் 28ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்தும் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 பேருக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications