முல்லை பெரியாறு-கேரள அமைச்சர்கள் டெல்லிக்கு படையெடுப்பு-நாடாளுமன்றம் முன் தர்ணா!

அவர்கள் பிரதமர் மற்றும் அனைத்து மத்திய அமைச்சர்களையும் சந்திக்கப் போகிறார்களாம்.
முல்லை பெரியாறு அணை விவகாரம் மீண்டும் பரபரப்பாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இடுக்கி மாவட்டத்தில் சில இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வால் முல்லை பெரியாறு அணைக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு அதன் வழியாக தண்ணீர் அதிக அளவில் கசிய தொடங்கியிருப்பதாகவும் கேரள அரசு கூறி வருகிறது. ஆனால் அணையை பரிசோதித்த தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறியுள்ளனர்.
ஆனாலும் நிலநடுக்கத்தால் அணையின் ஆஸ்திவாரமே ஆட்டம் கண்டு விட்டதாக கேரள நீர்பாசன துறை அமைச்சர் பிஜே ஜோசப் கூறி வருகிறார். அமைச்சரின் இந்த பேச்சால் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ள பகுதிகளான வண்டிபெரியாறு, சப்பாத்து, உப்புதரை, பீருமேடு உள்பட பல பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த சில தினங்களாக சாலை மறியல், உண்ணாவிரதம் உள்பட போராட்டங்கள் நடத்து வருகின்றன.
ஜெயலலிதா கொடும்பாவி எரிப்பு
வண்டிப் பெரியாறில் நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது. இந்நிலையில் கேரள அமைச்சர்கள் பிஜே ஜோசப், மற்றும் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று டெல்லி செல்கின்றனர்.
இவர்கள் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால், உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.
அத்தோடு நில்லாமல், அத்தனை மத்திய அமைச்சர்களையும் அவர்கள் சந்தித்து முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு, புது அணை கட்டுவதற்கு ஆதரவு திரட்டப் போகிறார்களாம்.
இந் நிலையில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த பல கட்சி எம்பிக்களும் நாடாளுமன்றம் முன் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications