கேரளாவின் புது அணைத் திட்டத்தை எதிர்த்து பென்னி குயிக் பேரவை சார்பில் டிச. 7ல் உண்ணாவிரதம்
போடிநாயக்கனூர்: முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும், புது அணை கட்ட வேண்டும் என்று கூறி வரும் கேரளாவைக் கண்டித்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள பாலாறுப்பட்டியில் பென்னி குயிக் பேரவை சார்பில் டிசம்பர் 7ம் தேதி 10 கிராம மக்கள் சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஜான் பென்னி குயிக். இவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர், ராணுவப் பொறியாளர். இந்த அணையால் தமிழக, கேரள மக்கள் பெருமளவில் பயன் பெறுவார்கள் என்பதற்காக போராடி அணையைக் கட்டினார். இதற்குத் தேவையான பணத்தைத் திரட்ட தனது சொத்துக்களையெல்லாம் விற்று பணம் திரட்டிக் கொண்டு வந்து அணையைக் கட்டி முடித்தார்.
இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் பல வீடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு முதல் பெயராக பென்னி குயிக்கின் பெயரை வைக்கும் வழக்கம் இன்றும் கூட நடைமுறையில் உள்ளதைக் காணலாம்.
இந்த நிலையி்ல் போடி நாயக்கனூர், பாலாறுப்பட்டியில் உள்ள பென்னி குக் பேரவை சார்பில் டிசம்பர் 7ம் தேதி அக்கிராமத்தில் பத்து கிராமத்தினர் கூடி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கின்றனர்.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் பாலாறுப்பட்டியில் நடந்தது. அக்கூட்டத்திற்குப் பின்னர் பேரவைத் தலைவர் ஆண்டி கூறுகையில், கூலையனூர், குச்சனூர், பாலாறுப்பட்டி உள்பட 10 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கேரளாவுக்கு எங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கவுள்ளோம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications