முல்லைப் பெரியாறு நீர் வரும் மதகை உடைத்து கேரள காங். ரகளை- யுவராஜா எச்சரிக்கை
சென்னை: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீர் வரும் மதகின் கேட்டை உடைத்து கேரள காங்கிரஸ் கட்சியினர் ரவுடித்தனம் செய்துள்ளனர். இதற்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
புதிய அணை கட்டும் கோரிக்கையை வலியுறுத்தி, அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் மதகு பகுதியில் போராட்டம் நடத்தப்படும் என்று கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
அணை பலவீனமாக இருப்பதால் அணையில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் தண்ணீரின் அளவை அதிகரிக்கும் வகையில் மதகுகளை திறந்துவிடப் போவதாகவும், அதனால் அணையில் உள்ள தண்ணீரின் நீர்மட்டம் குறையும் என்றும், அதன் காரணமாக அணை தொடர்ந்து பாதுகாப்பான நிலையில் இருக்கும் என்றும் இளைஞர் காங்கிரசார் போராட்ட அறிவிப்பின்போது பிரசாரம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் கேரள மாநில இளைஞர் காங்கிரசார் வட்டார செயலாளர் ரோபி என்பவரது தலைமையில் நேற்று முன்தினம் முல்லை பெரியாறு அணை தமிழக மதகு பகுதிக்கு செல்வதற்காக தேக்கடி நுழைவுவாயில் அருகே குவிந்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட காங்கிரசார் அங்கு திரண்டு வந்து தேக்கடி நுழைவுவாயில் பகுதியில் முற்றுகையிட்டனர். ஆனால் அங்கு வெறும் 25 போலீஸாரே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேக்கடி நுழைவு வாயில் பகுதியில் உள்ள இரும்பு கிரில் கேட்டில் சிலர் ஏறி குதித்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிதரன் சிலரை தடுத்து நிறுத்தினார். இதையடுத்து போலீஸார் மீது காங்கிரஸார் ரவுடித்தனமாக தாக்கத் தொடங்கினர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் சசிதரன் மற்றும் போலீசார் சுதாகரன், விதினசந்திரன், ஜெயதேவன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சசிதரன் தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது.
அதற்குள் காங்கிரசார் கும்பலாக தேக்கடி நுழைவுவாயில் கதவை திறந்துவிட்டு முல்லை பெரியாறு அணையின் தமிழக மதகு பகுதிக்கு ஓடினார்கள். அங்கிருந்த சிறிய கிரில் கேட்டையும் உடைத்துவிட்டு மதகு பகுதிக்கு விறுவிறுவென ஏறிச்சென்றனர்.
பின்னர் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் மதகுகளின் மேல் 10-க்கும் மேற்பட்டோர் ஏறி காங்கிரஸ் கொடியை நாட்டினர். மற்றவர்கள் மதகுகளின் அருகே திரண்டு நின்றனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
தமிழக இளைஞர் காங். கண்டனம்
கேரள காங்கிரஸ் கட்சியினரின் இந்த செயலுக்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தேக்கடியில் நடந்துள்ள சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. கேரள காங்கிரஸாரின் செயலுக்கு தமிழக இளைஞர் காங்கிரஸார் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் ஒப்படைக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள பேச்சுவார்த்தையில் தமிழக அரசும் பங்கேற்க வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications