224 பயணிகளுடன் தரையிறங்க முடியாமல் வட்டமிட்ட விமானம்: சென்னை விமான நிலையத்தில் பீதி
சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அதை தரையிறக்க முடியாமல் விமானி சுமார் 35 நிமிடங்கள் வானில் வட்டமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
224 பயணிகள், 12 விமான சிப்பந்திகளுடன் கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு 10.45 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. ஆனால் அப்போது விமானத்தின் சக்கரப்பகுதியில் திடீர் என்று கோளாறு ஏற்பட்டது.
இதனால் விமானத்தை தரையிறக்க முடியவில்லை. உடனே விமானி இது குறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தவுடன் விமான நிலையத்தில் மருத்துவ குழுவினர், தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். விமானம் சுமார் 35 நிமிடம் வானில் வட்டமிட்டது.
ஒரு வழியாக இரவு 11.20 மணிக்கு விமானி சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கினார். இதனால் விமானத்தில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விமானம் தரையிறங்கும் வரை விமான நிலையம் பரபரப்பாக இருந்தது.












Click it and Unblock the Notifications