முல்லைப் பெரியாறு குறித்து பிரதமரைச் சந்தித்த ஏ.கே.அந்தோணி- கேரளா மறைமுக நெருக்குதல்?

முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக இதுவரை மத்திய அரசிடமிருந்து பெரிய அளவில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், பவன் குமார் பன்சால் ஆகியோருடன் சமீபத்தில் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
அதேசமயம், பிரதமரை, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, எம்.பிக்கள் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். தமிழக முதல்வர் இதுவரை பிரதமரை நேரில் சந்திக்கவில்லை. மாறாக அதிமுக எம்.பிக்கள் சந்திததுப் பேசினர். அதேபோல திமுக எம்.பிக்களும் சந்தித்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், கேரளாவைச் சேர்ந்தவருமான ஏ.கே.அந்தோணி இன்று திடீரென பிரதமரைச் சந்தித்துப் பேசினார். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அவர் பிரதமரைச் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அந்தோணி இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிடாமல் இருந்து வருகிறார். இதனால் கேரளாவில் அவருக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில்தான் அந்தோணி, பிரதமர் சந்திப்பு நடந்துள்ளது.
கேரள அரசின் நெருக்குதல் காரணமாக அந்தோணி, பிரதமரைச் சந்தித்தாரா என்பது தெரியவில்லை. இருப்பினும், இந்தப் பிரச்சினையில் பிரதமர் நேரடியாக தலையிட வேண்டும் என்று மன்மோகன் சிங்கை, அந்தோணி வலியுறுத்தியதாக தெரிகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications