திமுகவைத் தொடர்ந்து டிச. 30ம் தேதி அதிமுக செயற்குழு,பொதுக்குழுக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் திமுக தனது செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியது. அதில் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக உண்ணாவிரதம் மற்றும் மனிதச் சங்கிலிப் போராட்டம் ஆகியவற்றை அறிவித்தது.அதன்படி 12ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இன்று மனிதச் சங்கிலிப் போராட்டம் மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் அதிமுகவும் தனது செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டங்களை டிசம்பர் 30ம் தேதி கூட்டியுள்ளது. அன்று பிற்பகல் 2 மணிக்கு வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி கல்யாண மண்டபத்தில் கூட்டங்கள் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் அதிமுக சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications