முல்லைப் பெரியாறு பிரச்சனை- கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்க ஞானதேசிகன் கோரிக்கை

இது குறித்து ஈரேட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. அதனை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். முல்லை பெரியாறு பிரச்சனையில் கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று செயல்படுத்த வேண்டும்.
கேரள அரசு கூறுவது போல் முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்க முடியாது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது இது போன்ற ஒப்பந்தங்கள் சரியாக இருக்காது. முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் உரிமை எந்த நிலையிலும் பாதிக்க கூடாது.
இந்த பிரச்சனையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. முல்லைப் பெரியாறு பிரச்சனையில் இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு இங்கு வர உள்ளது.
அந்த குழு போராட்ட குழுவினர் உடன் பேசி இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும். கூடங்குளம் அணு மின் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால் 2,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதன் முலம் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு தீரும், என்றார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications