நெல்லை- தென்காசி அகலப் பாதையில் போக்குவரத்து மார்ச் மாதம் துவங்கும் - மதுரை கோட்ட மேலாளர் கோயல்
நெல்லை: நெல்லை-தென்காசி அகலப்பாதையில் மார்ச் மாதம் ரயில் போக்குவரத்துக்கு தயாராகிவிடும் என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் கோயல் தெரிவித்தார்.
மணியாச்சியிலிருந்து தூத்துக்குடி வரை நடைபெறும் மின் மயமாக்கும் பணிகளை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் கோயல் ஆய்வு செய்தார். அதன்பிறகு நெல்லையில் இருந்து திருச்செந்தூர் வரையில் உள்ள ரயில் பாதையை ஆய்வு செய்தார்.
அதன்பிறகு தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் கோயல் கூறியதாவது,
நெல்லை முதல் தென்காசி வரை அகலப்பாதை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இங்கு தண்டவளங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துவிட்டது. ஆனால் சில இடங்களில் சிக்னல்கள் அமைக்கும் பணி மட்டும் நடந்து வருகின்றது.
இதனை தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் இந்த பாதையில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், அதிகாரிகள் உள்ளிட்டோரின் ஆய்வு நடைபெற உள்ளது. வரும் மார்ச் மாதம் இந்த வழித்தடம் போக்குவரத்திற்கு தயாராகிவிடும்.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 2,3 பிளாட்பாரத்தில் கூரை அமைக்கப்படும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆள் இல்லாத ரயில்வே கிராசிங் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகின்றது. இங்கு அனைத்து பிளாட்பாரங்களையும் இணைக்கும் விதத்தில் புதிய கட்டிடம் அருகே நடைபாதை மேம்பாலம் அமைக்கப்படும்.
முன்னீர்பள்ளத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியில் எங்களது பணி குறைவு. நெடுஞ்சாலை துறையின் பணியே அதிகமாக உள்ளது. திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் விரைவில் ஊழியர்கள் ஓய்வறை கட்டப்படும், என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications